இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் திருமணம் செய்துகொண்டு 11 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.
அவர்கள் பிரிவதாக நேற்றில் இருந்தே செய்தி பரவி வந்தது. தற்போது அதிகாரபூர்வமாக ஜி.வி.பிரகாஷ் விவாகரத்தை அறிவித்து இருக்கிறார்.
எங்கள் 11 வருட திருமண வாழ்க்கைக்கு பின் சமரசமாக பிரிய முடிவெடுத்து இருக்கிறோம். எங்கள் மன நிம்மதிக்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்.
மீடியா மற்றும் நண்பர்கள் இந்த நேரத்தில் எங்கள் privacyக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என ஜி.வி.பிரகாஷ் கூறி இருக்கிறார்.
Post a Comment