யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் தொடரும் குழப்பம்! ஒருவர் கைது.







 யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவரால்  வைத்தியசாலை  உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு  10 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.


வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவரை, மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு, மதுபோதையில் வந்த நபரொருவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள்ளே நுழைந்து சிகிச்சையளிக்க கோரியுள்ளார்.


இதன்போது ஏன் மோட்டார் வண்டியில் உள்ளே வந்தீர்கள் என கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது  மதுபோதையில் வந்த நபர், அலுவலக மேசை மீது இருந்த அச்சு இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial