இந்த நாட்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக, மலையக ரயில் தண்டவாளங்களின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் சில இரவு நேர ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு மற்றும் பதுளை, பதுளை மற்றும் கொழும்புக்கு இடையில் இயங்கும் இரவு நேர சிறப்பு ரயில்கள் இன்று மூன்றாவது நாளாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏனைய ரயில்கள் இன்று இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment