ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் இரண்டாவது திருமண விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் செல்வாக்குமிக்க தம்பதிகளான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் மற்றொரு பிரம்மாண்ட விழாவிற்காக மீண்டும் செய்திகளில் இடம் பெற்றுள்ளனர்.
அவர்களது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முன்னதாக ஜாம்நகரில் நடந்த ஆடம்பரமான கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, இரண்டாவது நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 28 முதல் 30ம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழா, இத்தாலியிலிருந்து புறப்பட்டு தெற்கு பிரான்ஸ் கடற்கரையோரம் பயணத்தை முடிக்கும் ஒரு ஆடம்பரமான சொகுசு கப்பலில் நடைபெறவுள்ளது.
சுமார் 800 விருந்தினர்கள் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய 600 ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஜாம்நகரில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஆடம்பரமான கொண்டாட்டங்கள் சுமார் ரூ.1260 கோடி செலவழித்ததாக கூறப்படுகிறது. கேட்டரிங் செலவு மட்டும் ரூ.200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் தங்கள் மகன் ஆனந்தின் திருமணத்தை (ஜூலை 12ம் திகதி) மறக்க முடியாத நிகழ்வாக மாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment