நாடளாவிய ரீதியில் இந்த நாட்களில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பயிரிடப்பட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழிந்து போவதாலும், காற்றினால் மரக்கறி வேர்கள் உதிர்ந்து போவதாலும் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மரக்கறிகளின் விலை படிப்படியாக அதிகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு மாத காலப்பகுதிக்குள் மரக்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் நுவரெலியா பொருளாதார நிலைய வர்த்தக சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மரக்கறி விலைகள் மற்றும் தற்போதைய விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் தொழிற்சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
Post a Comment