இந்தியா, விருதுநகர் மாவட்டத்தின் செங்கமலப்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில், 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இந்த வெடி விபத்தின்போது, குறித்த பட்டாசு ஆலையில் 30க்கும் அதிகமான பட்டாசு உற்பத்தி அறைகளில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆலையின் ஒரு அறையில் பேன்சி ரக வெடிகள் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன.
அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவிய நிலையில் 8 அறைகள் முற்றிலுமாக தீக்கிரையாகியதாக குறிப்பிடப்படுகின்றது.
Post a Comment