பி வாசுக்கு இளையராஜா கொடுத்த இன்ப அதிர்ச்சி







இளையராஜாவை பற்றி சமீபகாலமாக நிறைய செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. 

வைரமுத்து, இளையராஜா இடையே ஆன சண்டை முடிவில்லா தொடர் கதையாக போய்க் கொண்டிருக்கிறது. 

இளையராஜா தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.


இந்நிலையில் இளையராஜா பீக்கில் இருந்த போது பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இசையமைப்பதற்காக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் அவரை அணுகி உள்ளனர். இந்த படத்தில இயக்குனராக சந்தான பாரதி மற்றும் பி வாசு ஆகியோர் பணியாற்றினார்.


மேலும் அப்போது இளையராஜா ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்தாராம். ஆனால் பன்னீர் புஷ்பங்களின் மொத்த பட்ஜெட்டே ஐந்து லட்சம் தானாம். மிகச் சின்ன பட்ஜெட்டில் புதுமுக நடிகர்களை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர்.


மேலும் கதையைக் கேட்டவுடன் இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்க சம்மதித்து விட்டாராம். படத்தின் கடைசி வரை இளையராஜா இந்தப் படத்திற்கான சம்பளம் எவ்வளவு என்பதை கூறவில்லையாம். இதனால் தயாரிப்பாளர் இளையராஜா எவ்வளவு கேட்பார் என கதி கலங்கி போயிருந்தார்.


படம் முடிந்த பின்பு கடைசியாக எவ்வளவு சம்பளம் என்று கேட்டபோது இளையராஜா சம்பளமே வேண்டாம் என்று கூறிவிட்டாராம். புதுசா படத்தை எடுக்குறீங்க, நல்லா வருவீங்க என்று கூறிவிட்டாராம். இதை கேட்டு படக்குழு அதிர்ச்சி ஆகிவிட்டனராம்.

மேலும் இளையராஜா இப்படி செய்ததை சமீபத்தில் பி வாசு ஒரு பேட்டியில் கூறி பெருமை பட்டிருந்தார். 


இளையராஜாவை பற்றி மோசமான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வீடியோ பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial