அரச வங்கியில் ஒன்றில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வங்கியிலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தனமல்வில பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் .
சந்தேக நபர்கள் போலி மோதிரங்களை அடகு வைத்து 17 இலட்சத்து 9,000 ரூபா பணத்தைப் பெற்றுள்ளனர்.
அதேவேளை கைதான இருவரும் பல முறை பத்து போலி மோதிரங்களை வங்கியில் அடகு வைத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது .
Post a Comment