விபச்சார பெண்களுக்கு மரண தண்டனை

 





ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இதன்போது அவர்கள், இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடைபெறும் என்று அறிவித்தனர். தவிரவும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும் பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், என்றும் உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளித்திருந்தனர்.

ஆனால், தலிபான்களின் ஆட்சி அவ்வாறாக நடைபெறவில்லை, இதன் விளைவாக அங்கு தற்போதும் வறுமையும், பசியும், நோயும் மட்டுமே மிஞ்சியுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் அரசு தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கலந்துகொண்ட தலிபான் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்ஸதா வெளியிட்ட அறிவிப்பில், பெண்களுக்கு பொது இடத்தில் வைத்து கசையடி, கல்லடி வழங்கும் நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வரும் எனக் கூறியுள்ளார்.

அதில் அவர் ‘சர்வதேச சமூகம் ஆப்கன் பெண்களின் உரிமைகள் பற்றி பேசி வருகின்றன, அது ஷாரியத் சட்டத்துக்கு எதிரானது. பெண்களைக் கல்லால் அடித்துக் கொன்றால் அது பெண் உரிமைக்கு எதிரானது என நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால், விரைவில் நாங்கள் அதை நடைமுறைப்படுத்தப் போகிறோம்.

திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களை நாங்கள் கல்லால் அடித்தும், கசையடி கொடுத்தும் கொல்லும் நடைமுறையைக் கொண்டு வரப் போகிறோம், பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்படும்.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial