75,000 இலங்கையர்கள் வெளிநாடு பயணம்






 இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் சுமார் 75,000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 74,499 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 39,900 பேர் ஆண் தொழிலாளர்கள் என்பதுடன் 34,599 பேர் பெண் தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான இலங்கையர்கள் வேலை நிமித்தம் குவைத்துக்குச் சென்றுள்ளதுடன் அவர்களின் எண்ணிக்கை 17,793 ஆகும்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, ​​இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலங்கையர்கள் தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வேலை தேடும் போக்கு அதிகரித்துள்ளது.

இலங்கையில் 2,374 பேர் தென்கொரியாவுக்கும், 2,114 பேர் இஸ்ரேலுக்கும், 1,899 பேர் ருமேனியாவுக்கும், 1,947 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வேலை நிமித்தம் வெளிநாடு சென்ற இலங்கையர்கள் இந்த வருடத்தின் முதல் 2 மாதங்களில் மாத்திரம் 963.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial