28 கோடி பேர் கடுமையான பட்டினியால் தவிப்பு

 





உலகம் முழுவதும் கடந்த 2023 ஆம் ஆண்டில் 28 கோடி பேர் கடுமையான பட்டினியை எதிர்கொண்டதாக ஐக்கிய நாடுகள் உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் உணவு பாதுகாப்பு அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உணவு பாதுகாப்பின்மை மோசமடைந்த நிலையில் சுமார் 28.20 கோடி மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டனர் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக போர்ச் சூழல் உள்ள காசா மற்றும் சூடானில் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் உள்ளிட்டவைகளால் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளதுடன் போர், காலநிலை மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி ஆகியவற்றால் 2023 ஆம் ஆண்டில் சுமார் 30 கோடி மக்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொண்டனர்.

13.50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள 20 நாடுகள் அல்லது பிரதேசங்களில் கடுமையான பட்டினிக்கு மோதல் அல்லது பாதுகாப்பின்மை சூழ்நிலைகள் முக்கிய காரணமாகவுள்ளன.

வெள்ளம் அல்லது வறட்சி போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் 18 நாடுகளில் 7.20 கோடி மக்களின் கடுமையான உணவு பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாகும்.

மேலும் பொருளாதார பாதிப்புகளால் 21 நாடுகளில் 7.50 கோடி மக்கள் பட்டினி பாதிப்பை சந்தித்தனர் ” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial