அமெரிக்காவில் மேரிலண்ட் மாநிலத்தின் பால்டிமோர் நகரிலுள்ள பிரான்சிஸ் ஸ்கொட் கீ பிரிட்ஜ் எனும் பாலமொன்றின் மீது பாரிய கப்பல் மோதியதால், அப்பாலம் ஆற்றில் இடிந்து வீழ்ந்துள்ளது.
66 மீற்றர் நீளமான பாலத்தின் மீது இன்று அதிகாலை 1.35 மணியளவில் பாரிய சரக்குக் கப்பலொன்று, மோதியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பாலம் இடிந்ததால் பல வாகனங்களும் ஆற்றில் வீழ்ந்துள்ளன.
அவ்வேளையில் குறைந்தபட்சம் 20 நிர்மாண ஊழியர்கள் பாலத்தில் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறைந்தபட்சம் 20 பேர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் நீரில் மூழ்கி பலர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வௌியாகியுள்ளன.
Post a Comment