தமிழ் சினிமா வரலாற்றிலே அடிமட்டத்தில் இருந்து தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னுக்கு வந்தவர்களில் முதலில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் சில நூறுகளில் ஆரம்பித்து அவரது பயணம் இன்று சில நூறு கோடிகள் வரை விரிவடைந்துள்ளது என்பது அவரது கடின உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த பரிசே ஆகும்.
சினிமாவில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை நெருங்கும் சூப்பர் ஸ்டார் அவர்களின் திரை வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது.
இன்றைய சூழலில் அவரது படங்கள் வெற்றி அடைந்தாலும் அடையாவிட்டாலும் அவர் பெயருக்காகவே வசூலில் தன்னிறைவே அடைகின்றன.
அப்படி இருக்க அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நானும் இயக்குனர் தான் என்ற இறுமார்ப்போடு இயக்கிய லால் சலாம் பற்றி சினிமா ஆர்வலர்கள் விமர்சிப்பது தலைவருக்கு பெருத்த வேதனையை அளிக்கிறது. ஆர்வக்கோளாறில் ஐஸ்வர்யா இயக்கிய 3, வை ராஜா வை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாமல் போனது.
தனது தோல்விக்கு பொறுப்பேற்காத ஐஸ்வர்யா, “3” படம் சரியாக போகாததற்கு கொலவெறி பாடல் தான் காரணம் என்று பழியை அனிருத் மேல் தூக்கி போட்டார். அதேபோல் இப்படத்தின் தோல்வியிலும் பல பேரின் மீது பழியை தூக்கி போட்டு தன்னை திறமையானவராக காட்டிக் கொண்டார் ஐஸ்வர்யா.
லால் சலாம் படத்தை தயாரித்த லைக்காவோ இப்படத்தின் தோல்வி தலைவர் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அடிபட்டாலும் வலிக்காத மாதிரியே நடித்தது. லால் சலாம் படத்தால் லைக்காவுக்கு 40 கோடி நஷ்டம். ரஜினி, லைக்காவிடம் வருத்தப்படாதீங்க நான் பாத்துக்குறேன் மனசுல ஏதும் வச்சுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.
இந்த படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்து நஷ்டத்தை ஈடு கட்டி உள்ளாராம். ஏனென்றால் ரஜினிக்காக தான் இந்த படத்தை ஐஸ்வர்யாக்கு கொடுத்தார்கள் லைக்கா.
அதனால் ரஜினிக்கு இது அசிங்கமா போச்சு. சௌந்தர்யா ரஜினிகாந்த்தும் இதே வேலையை தான் பண்ணுகிறாராம்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா
தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Post a Comment