சல்மான்கானுக்கு ஜோடியாகும் திரிஷா





 கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்திருந்தார் நயன்தாரா. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் கெத்துடன் வலம் வந்த நயன்தாரா திருமணத்திற்கு பிறகு டல்லடித்து விட்டார். இப்போது அந்த இடத்தை திரிஷா பிடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் உச்சத்திற்கு சென்ற திரிஷா சில காரணங்களினால் தமிழ் சினிமாவை விட்டு அக்கடதேசம் சென்றுவிட்டார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நிலையில் அவரது கைவசம் இப்போது 8 படங்கள் இருக்கிறது.

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடிக்கிறார். இதற்கு அடுத்தபடியாக அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படமும் திரிஷா கைவசம் தான் இருக்கிறது.

இதைத்தொடர்ந்து லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த நிலையில், இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் கேமியோ தோற்றத்தில் திரிஷா நடித்திருக்கிறார்.

அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியின் விஸ்வபகரா மற்றும் மலையாளத்தில் மோகன்லாலின் ராம் ஆகிய படங்களில் திரிஷா நடித்து வருகிறார். மேலும் டோவினோ தாமஸின் ஐடென்டிபை படத்திலும் திரிஷா தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர சோனி லைவ் சீரிஸில் உருவாகி வரும் பிருந்தா என்ற தொடரும் திரிஷா கைவசம் இருக்கிறது. மேலும் இயக்குனர் கௌரவ் நாராயணன் வேல்ஸ் நிறுவனத்திற்காக கதாநாயகி முக்கியத்துவம் உள்ள படத்தை எடுக்க இருக்கிறார். இந்தப் படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அதேபோல் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் விஷ்ணுவரதன் சல்மான்கான் படத்தை எடுக்க உள்ள நிலையில் அதிலும் திரிஷா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 40 வயதிலும் கொடிக்கட்டி பறக்கும் த்ரிஷாவை இன்னும் இரண்டு வருடங்களுக்கு யாராலும் அசைக்க முடியாது.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial