கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் இப்போது உள்ள இளம் நடிகர்களின் படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.
இந்த படம் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. அதோடு இந்த படத்தின் பட்ஜெட் பெரிய தொகையில் தான் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இன்னும் ஒரு மாத சூட்டிங் அமரன் படத்திற்கு மிச்சம் இருக்கிறதாம். எனவே இதற்கு இன்னும் 20 கோடிக்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது. படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் கமல் வேறு வழியில்லாமல் சிவகார்த்திகேயனை நம்பி பல கோடி முதலீடு செய்து வருகிறார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா
தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Post a Comment