தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி. சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த், வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாறன் என இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
Post a Comment