டும் டும் டும், பிரியமான தோழி போன்ற படங்களில் நடித்த போது இந்த ஜோடி நல்லா இருக்கே என ரசிகர்களை நினைக்க வைத்த ஒரு ஜோடி என்றால் அது மாதவன் , ஜோதிகா தான்.
திருமணம் முடிந்து நடிப்புக்கு பிரேக் விட்ட ஜோதிகா 8 வருடங்களுக்கு பிறகு 36 வயதினிலே திரைப்படம் முலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவர் அண்மையில் மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, 36 வருடங்களுக்கு பிறகு இந்தி திரையுலகில் ஜோதிகா நடித்துள்ளார். விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ் கான் , மாதவன், ஜோதிகா ஆகியோர் இணைந்து சைத்தான் என்ற குஜராத்தி மொழியில் வெளியான வாஷ் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கின்றனர்.
சைத்தான் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் த்ரிலிங்காக இருக்கும் சைத்தான் மார்ச் 8 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா
தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Post a Comment