உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பெண்கள் ஆக எல்லாத்துறையிலும் சாதித்து வரும் மகளிருக்கு சம நீதியும் அங்கீகாரமும் கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.
ஆனால் எங்களுடைய நோக்கமே சம நீதி தான் என அடிக்கோடிட்டு காட்டி இருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். பொதுவாக மற்ற கட்சிகள் எல்லாம் மகளிர் அணிக்கு தலைமையாக தான் பெண்களை நியமிப்பார்கள். ஆனால் விஜய்யின் கட்சி தற்போது முக்கிய அணிக்கு தலைமையாக பெண்களை நியமித்திருப்பது மிகப்பெரிய கௌரவமாக இருக்கிறது.
அதை ரசிகர்கள் மகளிர் தினமான இன்று கோலாகலமாக கொண்டாடி ஒட்டு மொத்த மீடியாக்களின் கவனத்தையும் பெற்றுள்ளனர். அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் பொறுப்பு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமதி விஜயலட்சுமி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மாநில இணை செயலாளர் ஆக திருமதி யாஸ்மின் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநில பொருளாளர் பதவி திரு வி சம்பத்குமார் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மாநில துணை செயலாளர் ஆக திரு விஜய் அன்பன் கல்லணை மற்றும் எம் எல் பிரபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment