இனம் இனத்தோடு தான் சேரும் என்று ஒரு சொலவடை சொல்வார்கள் அது போல பணக்காரன் கூட்டம் எப்போதுமே ஒன்றாக தான் நிற்பார்கள்.
அந்த வகையில் கடந்த வரம் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு ப்ரீ வெட்டிங் சூட் நிகழ்ச்சி 3 நாட்கள் மிக கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தார்கள்.
முக்கியமாக பாலிவுட் பிரபல நடிகர்கள் அனைவரும் அங்கே தான் மூன்று நாட்கள் குடியிருந்தார்கள்.
அது மட்டுமில்லாமல் அங்கே பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் இதில் கோலிவுட்டில் இருந்து இயக்குனர் அட்லி மற்றும் ரஜினி குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் போயிருந்தார்கள்.
அத்துடன் விளையாட்டு வீரர்கள், பெரிய பெரிய கம்பெனி நிறுவனத்தில் உள்ள உரிமையாளர்கள் அனைவரும் அங்கே தான் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார்கள்.
அதனாலயே குஜராத்தில் உள்ள ஜாம்நகர் மிகப் பிரம்மாண்டமாக இருந்துச்சு. மேலும் இதில் பேஸ்புக் ஓனர் மார்க் அவர்களும் போயிருக்கிறார்கள்.
ஆனால் அங்கே போனதும் இவரே ஆச்சரியப்படும் அளவிற்கு மிகப்பெரிய சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது பேஸ்புக் ஓனர் மார்க் எவ்வளவு பெரிய ஆளு என்று அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அவரே அம்பானியை பார்த்து மிரண்டு விட்டார். அப்படி என்ன நடந்தது என்றால் அம்பானியின் மகன் கையில் கட்டி இருக்கும் வாட்ச் 14 கோடி மதிப்புமிக்கது.
அதேபோல அம்பானியின் மகள் இஷா அம்பானி அவர் கட்டிய சேலை 12 கோடி. அந்த சேலையில் அப்படி என்ன ஒரு விஷயம் என்றால் டைமண்ட் பதிக்கப்பட்டிருக்கிறது. அது சரி காசு பணம் இருந்தால் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை தான்.
ஆனாலும் சேலைக்கும் வாட்ச்க்கும் விலை மதிக்க முடியாத அளவிற்கு செலவழித்தது தான் மிகப்பெரிய விஷயமாக பேஸ்புக் ஓனர் மார்க் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறார்.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment