பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில், குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் நாளை (08) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் திகதி அறிவித்த நாளில் இருந்து, ஆங்காங்கே குண்டு வெடிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.
பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிஷின் மாவட்டத்தில், இன்று (07) சுயேச்சை தேர்தல் வேட்பாளரின் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் 20 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஒரு வேட்பாளரின் அலுவலகத்தை குறி வைத்து, குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment