தளபதி விஜய் கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் இருக்கும் முக்கிய புள்ளிகளை தூங்க விடாமல் டென்ஷன் பண்ணி வருகிறார்.
அடிக்கடி கட்சி ஆலோசனைக் கூட்டம், அதிரடி முடிவுகள் என வாரத்திற்கு ஒரு அப்டேட் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வந்து கொண்டே இருக்கிறது. விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வையும் பார்க்கும் பொழுது நல்ல அரசியல் அனுபவம் இருக்கும் யாரோ ஒருவரால் பக்காவாக காய் நகர்த்தப்பட்டு வருகிறது என்பது நன்றாகவே தெரிகிறது.
விஜய் ஒரு பக்கம் அரசியல் கட்சி தொடங்கியதோடு சினிமாவை விட்டு விலகுகிறேன் என்ற பரபரப்பு வாக்குமூலத்தின் மூலம் ட்ரெண்டாகி வருகிறார். மற்றொரு பக்கம் நடிகர் அஜித்குமார் வாயை திறந்து எதுவும் பேசாமலேயே ட்ரெண்டாகி வருகிறார்.
அஜித் எங்கேயோ இருக்கும் ஏதாவது ஒரு போட்டோவை யாராவது எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டு விட்டால் கூட அந்த வாரம் முழுக்க அவர்தான் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்றில் இருக்கிறார்.
தற்போது தன்னுடைய தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் நிர்வாகிகளை களம் இறக்கி இருக்கிறார். மொத்த தமிழ்நாட்டையும் 100 மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் குறைந்த பட்சம் இத்தனை வாக்காளர்களை கட்சியில் உறுப்பினராக வேண்டும் என்ற டார்கெட் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எல்லாம் முடிய வரும் ஏப்ரல் மாதம் கட்சி மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment