கல்யாணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒரு விஷயம் என்று பொதுவாக சொல்வார்கள். அப்படித்தான் எல்லோரும் தமக்கான துணையைத் தேடி கல்யாண பந்தத்தில் இணைகிறார்கள்.
ஆனால் அது எப்படிப்பட்ட நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது என்பது ஒவ்வொருவருடைய கையில் தான் இருக்கிறது.
கணவன் மனைவிக்குள் என்னதான் சண்டைகள் சச்சரவு வந்தாலும் அதை அட்ஜஸ்ட் பண்ணி போகும் சில பிரபலங்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கல்யாணத்துக்கு பிறகு இவர் எனக்கு செட்டே ஆகாது, இந்த வாழ்க்கை நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்று பலரும் இதை முறித்துக் கொண்டும் வருகிறார்கள்.
இதில் நிறைய பிரபலங்கள் இருந்தாலும், அதில் நடிகை சமந்தாவை சொல்லலாம்.
முதல் கல்யாணத்தில் தோல்வியான பிறகு பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்து தற்போது அவருடைய வாழ்க்கையில் சில முக்கியமான ஐந்து முடிவுகளை எடுத்து இருக்கிறார். அதாவது கண் கெட்ட பிறகு சிலர் சூரிய நமஸ்காரம் பண்ணுவார்கள்.
அப்படித்தான் சமந்தா முதல் கல்யாணம் தோல்வியடைந்தால் அதன் மூலம் நிறைய பக்குவங்களை அடைந்து பல நல்ல விஷயங்களை மேற்கொள்ள தயாராக இருக்கிறார்.
அந்த வகையில் எந்த ஒரு காரணத்திற்காகவும் உதவி என்று முதல் கணவரிடம் போய் நிற்கக்கூடாது. எந்த காரணத்திற்காகவும் அவர் இருக்கும் பக்கம் கூட போகக்கூடாது.
அவரை விட பெரிய ஆளாக ஆகி ஜெயிக்க வேண்டும் என்று சபதம் போட்டிருக்கிறார். அத்துடன் இரண்டாவது கல்யாணத்தையும் பண்ணி விடக்கூடாது.
ஏனென்றால் அதுவும் தோல்வியாகிவிட்டால் எழுந்திருக்கவே கஷ்டமாகிவிடும். அதனால் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக செலவழிக்க வேண்டும். பிறருக்கு நல்லது செஞ்சு இப்படியே இருக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து இருக்கிறார். அதற்காக ப்ரொடக்ஷன் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி இருக்கிறார்.
மேலும் Podcast App கிரியேட் பண்ணி எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய விதமாக நோய் பற்றிய அவர்னஸை கொடுக்கப் போகிறாராம். ஏனென்றால் கண்டிப்பாக எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் நோயால் அவதிப்பட்டு வருவார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு மோட்டிவேஷன் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆப்-பை உருவாக்கி இருக்கிறார். இதற்கிடையில் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிற வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு போக வேண்டும் என்று வேகமாக செயல்பட்டு வருகிறார்.
Post a Comment