ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருந்த சைரன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் என இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் படத்தில் நடித்திருந்தனர். ஜெயம் ரவி கடந்த சில வருடங்களாகவே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் புதுமுக இயக்குநரை நம்பி ஜெயம் ரவி இறங்கிய நிலையில் அவருக்கு கை மேல் பலனாக சைரன் படம் வசூலை வாரி கொடுத்திருக்கிறது. இதற்கு முன்னதாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான முந்தைய படங்களை விட ரைசன் படம் அதிக வசூலை பெற்று தான் வருகிறது.
இந்நிலையில் முதல் நாளில் சைரன் படம் 1.4 வசூல் செய்து சிறந்த ஓப்பனிங் கொடுத்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது நாளும் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. நேற்று தினம் விடுமுறை நாள் என்பதால் சைரன் பட வசூல் எந்த மாற்றமும் இல்லாமல் அதே இரண்டு கோடி வசூலை செய்திருக்கிறது.
ஆகையால் மூன்று நாட்களிலேயே சைரன் படத்தின் வசூல் 5.4 கோடியை எட்டியுள்ளது. மேலும் படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதோடு சைரன் படத்தில் வருகையால் லால் சலாம் படத்தின் வசூல் குறைந்து இருக்கிறது.
கடந்த வாரம் வெளியான லால் சலாம் படம் கோடிகளில் வசூல் செய்து வந்த நிலையில் இப்போது சைரன் படத்தின் வருகையால் மந்தம் அடைந்துள்ளது. இப்போது இந்தியா முழுவதுமே 20 லட்சத்திற்கு உள்ளாக லால் சலாம் படம் வசூல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment