யாழில் நேற்றிரவு இடம்பெற்ற பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து நிகழ்ச்சி முற்றாக நிறுத்தப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
தடைகளை உடைத்துக் கொண்டு இளைஞர்கள் மேடையை நோக்கி ஓடிய நிலையில் நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்ட போதும் நிலைமை கட்டுங்கடங்காது சென்றது. கதிரை, தண்ணீர் தாங்கி உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாகின. நேற்றிரவு நிகழ்ச்சியின்போது பலரும் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையின் விடுவிக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ஒருவர் மயக்கமுற்றதுடன் பலரும் காயமடைந்தனர். தற்போதைய நிலையில் மூன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 25,000 ரூபா அனுமதிச் சீட்டு, 7,000 ரூபா அனுமதிச் சீட்டு, 3,000 ரூபாய் அனுமதிச் சீட்டு என கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்நதும் அதன்பின்னே இலவசமாக நின்றவாறும் இசைநிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.
பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந் நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன், தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்து நெருக்கடி ஏற்பட்டது.
ஒழுங்குபடுத்தப்பட்ட பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை காரணமாக குழப்பத்தில் முடிந்தது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment