சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தா தலைமையிலான மதிப்பீட்டுக் குழு, சீதுவை தளமாகக் கொண்ட போலி மருந்துகளை தயாரித்த, Isolez Biotech Pharma AG நிறுவனத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளதாக அரச கணக்காய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன்படி, நிறுவனத்தின் போலியான இம்யூனோகுளோபுலின் மற்றும் rituximab ஊசிகளை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் “ஏல” ஆவணங்களில் வெளிப்படையான முரண்பாடுகள் இருந்தும் கூட, மேலும் நான்கு மருந்துகளை அந்த நிறுவனத்திடம் கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுகாதார அமைச்சு குறித்த நிறுவனத்தின் ; 3,985 இம்யூனோகுளோபுலின் குப்பிகளுக்கு 144,293,355 ரூபாய்களை செலுத்தியுள்ளது.
இந்தநிலையில் சுகாதார அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்ட இந்த மருந்துகள் முக்கியமாக புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளாகும்.
இதற்கிடையில் போலியான இந்த மருந்துக் கொள்வனவு தொடர்பில், இதுவரை, சுகாதார அமைச்சின் 7 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment