இந்தியப் பிரதமர் மோடியை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம் டெல்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், வருகிற 19ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெறவுள்ளன.
Post a Comment