மயிலாடுதுறை அருண்பிரியா மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்து இறந்து போன 12 வயது குழந்தைக்கு... சிகிச்சை அளித்து ரமணா திரைபடம் போல் பெற்றோர்களை ஏமாற்றிய கொடூரம்!

*மயிலாடுதுறை அருண்பிரியா மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்து இறந்து போன 12 வயது குழந்தைக்கு... சிகிச்சை அளித்து ரமணா திரைபடம் போல் பெற்றோர்களை ஏமாற்றிய கொடூரம்!* 
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், மேல மங்கநல்லூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த... *பாலசுப்பிரமணியன்-சசிகலா* என்ற தம்பதியரின் கிஷோர் என்ற 12 வயது குழந்தை வயிற்று வலி காரணமாக நேற்று இரவு மயிலாடுதுறை *அருண்பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று(29.01.2024) காலை 9:45 மணிக்கு மருத்துவமனையில் பணிபுரியும் பாரதிதாசன்* என்ற மருத்துவரால் *அப்பண்டீஸ்* அறுவை சிகிச்சை (ஆப்பரேஷன்) செய்யப்பட்டது. குழந்தை நீண்ட நேரம் சுவாசம் இல்லாததை பார்த்து சந்தேகம் அடைந்த பெற்றோர். 

மருத்துவரிடம் சொன்ன பிறகு குழந்தை உயிரோடு தான் இருக்கிறது ஒன்னும் பயப்பட வேண்டாம் என்று சொல்லி ரமணா திரைபடத்தில் வரும் காட்சியை போல் ஏற்கனவே இறந்து போன குழந்தைக்கு சிகிச்சை அளித்து ஏமாற்றி உள்ளனர். அதன் பிறகு அந்தக் குழந்தையின் பெற்றோர் உறவினர்களை மருத்துவமனையின் வெளியே தள்ளி கேட்டை பூட்டி உள்ளனர். மதியம் ஒரு மணிக்கு மேல் தான் குழந்தை இறந்து போன தகவலை சொல்லி இருக்கின்றனர். *மயக்க மருந்து* அதிக அளவில் செலுத்தியதால் தான் குழந்தை இறந்து போனதாக குற்றச்சாட்டு எழுகிறது.
*தமிழ்நாடு அரசே!*மாவட்ட நிர்வாகமே!!* மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் பணம் பறித்து கொண்டு... 

தவறான சிகிச்சை அளித்து குழந்தை இறப்பதற்கு காரணமான அறுவை சிகிச்சை செய்த *மருத்துவர்* மற்றும் *மருத்துவமனை உரிமையாளரை* உடனடியாக *கைது* செய்ய வேண்டும்.
*அருண்பிரியா மருத்துவமனையை உடனடியாக மூடி சீல்* வைக்க வேண்டும் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial