சிறு வயதிலேயே நடிக்க வந்த பலரும், திரை உலகில் தொடர்ந்து தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தங்களின் பதின்ம வயதில் முக்கியமான இடத்தையும் பிடிப்பார்கள்.
அந்த வகையில் முக்கியமான ஒருவர் தான் நடிகை ரூபா ஸ்ரீ. இவர் 13 வயதில் நாயகியாக நடிக்க வந்து அதன் பின் குணச்சித்திர கேரக்டர் மற்றும் கிளாமர் கேரக்டர்களில் நடித்து பெயர் எடுத்தவர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த நடிகை ரூபா ஸ்ரீயின் பதின்ம பருவம் சென்னையில் தான் இருந்தது. அவர் 13 வயதில் இருக்கும்போதே கன்னட திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருக்கு கன்னடம் தெரியாது என்றாலும் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு நடித்தார். அந்த படத்தில் அவரது கேரக்டரை சுற்றி தான் கதை வந்தது என்பதால் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.
13 வயதிலேயே அவர் நாயகியாக கன்னடத்தில் நடிக்க தொடங்கினாலும் சில ஆண்டுகளிலேயே அவருக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு குறைந்த பின்னர் குணச்சித்திர மற்றும் கிளாமர் கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். மலையாள திரைப்படங்களில் பல படங்களில் நடித்த ரூபா ஸ்ரீ, தமிழில் சிம்பு நடித்த ’எங்க வீட்டு வேலன்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார்.
அதன் பின்னர் அவர் ’இதய நாயகன்’ ’மிலிட்டரி’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நிலையில் சில கன்னட படங்களிலும் நடித்தார். தமிழில் மீண்டும் அவர் ’பொண்டாட்டியே தெய்வம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் பாலசந்தர் இயக்கத்தில் உருவான ’டூயட்’ ’எல்லாமே என் ராசா’ போன்ற படங்களில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த ரூபா ஸ்ரீ, மீண்டும் தமிழில் ’வெற்றி முகம்’ ’புதையல்’ ’கடவுள்’ ’ஜானகிராமன்’ ’எட்டுப்பட்டி ராசா’ போன்ற படங்களில் நடித்தார்.
இதற்கிடையில், திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை கிட்டத்தட்ட அவர் நிறுத்திவிட்டார் என்று சொல்லலாம். ஒரு சில படங்களில் மட்டும் நடித்த அவர் திருமணத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளி விட்டு ’யாவரும் நலம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவரது கவனம் சீரியல் பக்கம் சென்றது.
சன் டிவி, பொதிகை டிவி, ஜெமினி டிவி, ஆசியா நெட், ஜீ தமிழ், ஜெயா டிவி, ஸ்டார் விஜய், கலர்ஸ் தமிழ், கலைஞர் டிவி உள்ளிட்ட டிவிக்களில் ஒளிபரப்பான பல சீரியல்களில் இவர் மாமியார், வில்லி போன்ற வேடங்களில் நடித்தார். அதிலும், பாரதி கண்ணம்மா தொடரில் தனது நடிப்பால் ஒரு ரவுண்டு வந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் அவர் மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். தமிழில் கூட அவர் ஸ்டார்ட் மியூசிக், தானை தலைவி, ராஜு வூட்ல பார்ட்டி, அண்டா கா கசம் உள்ளிட்ட தொலைக்காட்சி ஷோக்களில் தோன்றியுள்ளார்.
சினிமாவில் தனக்கான கதாபாத்திரங்கள் மூலம் கவனம் ஈர்த்த ரூபா ஸ்ரீ, சீரியல்களிலும் கூட தனக்கான தடத்தை பதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment