தனுஷ் நடித்த ஒரு படத்தில் வரும் காட்சிக்காக அவர் உண்மையிலேயே 15 பச்சை மிளகாய் கடித்து சாப்பிட்டுள்ளார். இது பற்றிய வீடியோ ஒன்றை தனுஷ் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துள்ளனர். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக தன்னை தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கடின உழைப்பை கொடுப்பவராக தனுஷ் இருந்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான அசுரன் படத்தில் அவரது கெட்டப் அதிகம் பேசப்பட்டது. படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதில் பல நடிகர்களை விடவும் தனுஷ் முன்னணியில் இருக்கிறார்.
அவரது நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் 12 ஆம் திகதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்திலும் மாறுபட்ட தோற்றத்தை வழங்கி ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு தனுஷ் கொண்டு சென்றுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மிகப் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் தேவதையை கண்டேன் என்ற படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் ஸ்ரீதேவிக்காக யார் பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவார்கள் என்ற போட்டி நடைபெறும்.
அப்போது உண்மையான பச்சை மிளகாய் சாப்பிட வைக்க தனுஷ் சொல்லியுள்ளார். அந்த நேரத்தில் ஒரே ஷாட்டில் சுமார் 15 மிளகாய்களை தனுஷ் கடித்து சாப்பிட்டுள்ளார்.
அவ்வாறான தனுஷின் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் அவரை இன்று முன்னணி ஹீரோவாக மாற வைத்துள்ளது. என அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர்செல்வம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில். இது தொடர்பான வீடியோ ஒன்றை தனுஷ் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துள்ளனர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment