நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் அன்னபூரணி.
நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இதற்கிடையே, இப்படம் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது.
ஓ.டி.டி வெளியீட்டிற்கு பிறகு இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக இந்த படத்தில் நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசும் வசனத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில்,
"ஜெய் ஸ்ரீ ராம்... இந்தக் குறிப்பை கனத்த இதயத்துடனும், அன்னபூர்ணி திரைப்படம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பத்துடனும் எழுதுகிறேன்.
அன்னபூரணியை உருவாக்குவது ஒரு சினிமா முயற்சி மட்டுமல்ல, நெகிழ்ச்சியைத் தூண்டும் மற்றும் ஒருபோதும் கைவிடாத உணர்வைத் தூண்டுவதற்கான இதயப்பூர்வமான முயற்சியாகும்.இது வாழ்க்கையின் பயணத்தை பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்டது.
அங்கு தடைகளை சுத்த மன உறுதியுடன் கடக்க முடியும் என்பதை நாங்கள் கற்றுக்கொள்கிறோம். ஒரு நேர்மறையான செய்தியைப் பகிர்வதற்கான எங்கள் நேர்மையான முயற்சியில், நாம் கவனக்குறைவாக காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
முன்பு திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் இருந்து அகற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நானும் எனது குழுவும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதில்லை.
இந்தப் பிரச்சனையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment