ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோவாக இருக்கிறார். ஜெயிலர் வெற்றிக்கு பின் மாஸ் கம் பேக் கொடுத்து மீண்டும் தான் ஒரு சூப்பர்ஸ்டார் என நிரூபித்துள்ளார்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் லால் சாலம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை ரஜினியின் மகளும் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
விக்ராந்த் மற்றும் விஷ்ணு இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் (cameo Role) இல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக தயாராக இருந்தது.
ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென ரிலீஸ் திகதியில் மாற்றம் ஏற்பட்டது. அடுத்த மாதம் தான் லால் சலாம் திரைப்படம் திரைக்கு வருகிறது என கூறப்படுகிறது.
சொன்ன தேதியில் லால் சலாம் திரைப்படம் வெளியாகாமல் போனதற்கு காரணம், இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை இதுவரை விற்பனை ஆகாமல் இருப்பது தான் என்கின்றனர். என்னப்பா சொல்லறீங்க ரஜினியின் படத்திற்கே இப்படியொரு நிலைமையா என திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், தனது மகளின் இயக்கத்தில் உருவான லால் சலாம் படம் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாமல் இருந்தால், ரஜினிகாந்தே இதற்கான முயற்சியை எடுத்து விட்டாராம்.
ஆம், சன் நிறுவனத்திற்கு உடனடியாக போன் கால் செய்து, லால் சலாம் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுள்ளார். ரஜினி சாரே போன் செய்ததனால் லால் சலாம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.
இதன்பின் தான் லால் சலாம் படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு உறுதி செய்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment