இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடல் நல்லடக்கம்

 




இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரணி  நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இதையடுத்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த பவதாரணியின் உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

பவதாரணியின் உடல் இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடல் நல்லடக்கம் | Singer Bhavadharini Is Physically Fit


பவதாரணியின் தேசிய விருது பெற்ற பிரபல பாடலான ‘மயில் போல பொண்ணு ஒன்னு. கிளிபோல பேச்சு ஒன்னு’ என்ற பாடலை பாடியபடி இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் மணிமண்டபத்துக்கு நடுவில் பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் இவருக்கும் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் நடைபெறும்” என இளையராஜாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial