ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 4 விமானங்கள் பழுதுபார்க்க வேண்டிய உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் விமானங்கள் தரையில் வைக்க வேண்டியுள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் கடந்த வருடம் மட்டும் போதிய விமானங்கள் இல்லாததால் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய வேண்டியிருந்தது. மேலும், இந்த நிலைமை விமானங்களின் தாமததத்திற்கு முக்கிய காரணமாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்பு 24 விமானங்களை கொண்டிருந்தது. தற்போது 18 விமானங்கள் மட்டுமே பறக்கும் மட்டத்தில் உள்ளன.
தற்போது பயன்பாட்டில் இல்லாத இரண்டு விமானங்களை திருப்பி அனுப்பி மூன்று புதிய விமானங்களை வாங்க முயற்சித்த போதும், நிலவும் நிதி நெருக்கடியால், அந்த கொள்முதல்களும் நடைபெறவில்லை.
பறக்கக்கூடிய 4 விமானங்களுக்கும் மிகக் குறைந்த பழுது பார்க்கும் பணிகள் மாத்திரமே தேவைப்படுகின்றது. அதனை பராமரித்தால், விமான அட்டவணைகளில் உள்ள பயணங்கள் இரத்து செய்யப்படுவதை கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment