தளபதி 68 படத்தின் டைட்டில் லீக் ஆகிவிட்டது என செய்திகள் வெளியாகி கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. பொறுமையா இருங்கப்பா, நல்ல நாள் பார்த்து நாங்களே டைட்டில் சொல்கிறோம் என சொல்லி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதற்குள்ளேயே படத்தின் உண்மையான டைட்டில் வெளியாகி அடுத்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அட நடிகர் விஜய் என்றாலே சர்ச்சை தான் என சமீப காலமாக ஆகிவிட்டது. அப்படி இருக்கும் போது தளபதி 68 படத்தில் என்ன சர்ச்சை என்று கேட்டால், படத்தின் டைட்டிலே சர்ச்சை தான். விஜய்க்கு கடந்த சில படங்கள் எல்லாமே ஆங்கில டைட்டிலாக அமைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படத்தின் டைட்டில் வெளியாகும் பொழுதும் பஞ்சாயத்து கிளம்பி விடுகிறது. அப்படி இருந்தும் தளபதி 68 படத்திற்கும் ஆங்கில டைட்டிலை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
நடிகர் விஜய் லியோ படம் முடிந்த கையோடு ஓய்வு கூட எடுக்காமல் உடனே தளபதி 68 படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டார். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. தற்போது ஒட்டுமொத்த பட குழுவும் தாய்லாந்தில் பிஸியாக இருக்கிறார்கள். அதிலும் ஏற்கனவே விஜய் இப்போ பார்த்தாலும் 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் போல் தான் இருக்கிறார். அதையும் தாண்டி இந்த படத்தில் தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி அவரை இன்னும் இளமையாக காட்ட இருக்கிறார்கள்.
Post a Comment