இன்றைய தலைமுறைக்கு ஒன்று புரியவில்லை.
யார் இவர் ? கடந்த பத்து வருடங்களில் திரைப்படங்கள் இல்லை, பேட்டிகள் இல்லை, இவரை மீமாக சித்தரித்து மகிழ்ந்தது சமூகவலைதளம். மரணம் மட்டுமே விடுதலை என்ற கட்டத்தில் தான் இறந்திருக்கிறார். இருந்தும் 71 வயதில் இறந்தவருக்கு ஏன் நம் வீட்டின் அப்பா, அம்மா, அண்ணன் எல்லாம் வருந்துகிறார்கள். கண்ணீர் சிந்துகிறார்கள். கோடியில் மக்கள் கூட்டம் அவரை சுமந்து செல்கிறது. ஒரு விமர்சனம் இன்றி ஊர்கூடி அனைவரும் வாழ்த்துகிறார்கள். அன்பும், பண்பும், வீரமும், குழந்தைக் கோபமும் ஒருசேரக் கொண்ட ஒரு முரட்டு சிங்கம் இனி இல்லை என்கிறார்கள். என்னடா இது !! எப்பேர்பட்ட வழியனுப்பல் இது ! யார் இது !! எதற்காக இவ்வளவு கூட்டம்.
ஒன்றுமில்லை ! தன் வாழ்நாள் முழுவதும் ஒருவன் பிறருக்கு உதவியிருக்கிறான், உணவிட்டிருக்கிறான், பேதங்கள் இன்றி எல்லோரையும் அருகில் அமர வைத்து அவர்தம் குறைகள் கேட்டிருக்கிறான். சொல்லாய் நில்லாமால் செயலாகவே வாழ்ந்திருக்கிறான்.
கண்ணா 2K கிட்ஸ், இது செஞ்சுரிகள் அடிக்கும் விளையாட்டுக் கேப்டன் இல்லை. தல இல்லை, தளபதி இல்லை,
ஒற்றை இராணுவம், அன்பு ஆயுதம், இன்று யார் ரசிகனாக இருக்கும் அத்தனை பேரின் முதல் ஆதர்சம். தமிழ் சினிமாவின் நிரந்தர ஆக்சன் ஹீரோ.
பெயர், கேப்டன் விஐயகாந்த். தொழில் - வாழ்நாள் முழுவதும் பிறருக்கு உதவுவது. குணம் - தலைமைப் பண்பு.
Post a Comment