நடிகர் ரஜினிகாந்த் கமலஹாசன் போன்ற நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றி பெறாது என்ற சென்டிமென்ட் தொடர்ந்த போது தனது நூறாவது படமாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கி மிரட்டியது விஜயகாந்தின் ரசிகர்கள் படை...
திரை உலகில் திரைப்பட கலைஞர்கள் குறித்து பேசும் போது நடிகர் விஜயகாந்த் பேச்சு எப்போது வந்தாலும் விஜயகாந்தை சிலாகித்து சில நிமிடங்கள் பேசி விட்டே கடக்கிறார்கள்..
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நிகழ்த்திய அதிசயம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விஜயராஜ் அழகர்சாமியாக மதுரையில் 10வது மட்டுமே படித்த விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக சாதித்தது ஒரு சரித்திர கதை..
எளிய தோற்றம் கொண்ட கறுப்பு நிறம் கொண்ட மனிதர்கள் சினிமா துறையில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை தமிழ் சினிமாவில் உள்ள பலருக்கும் விதைத்ததில் விஜயகாந்த்திற்கு பங்கு உண்டு..
விஜயகாந்தின், தூரத்து இடிமுழக்கம் திரைப்படம் வெற்றிபெறும் வரையில் விஜயகாந்த் எதிர்கொண்ட விமர்சனங்கள் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத எதிர்மறை விமர்சனங்கள்..
எல்லா விமர்சனங்களையும் கடந்து வெற்றி பெற்று தன்னுடன் வெற்றிக்காக போராடியவர்கள் அத்தனை பேரையும் தன்னோடு தோளோடு தோளாக தோள் கொடுத்து தூக்கி விட்டது விஜயகாந்தின் மிக ...
விஜயகாந்தின் அலுவலகத்தை வாய்ப்புக்காக போராடும் உதவி இயக்குனர்கள் தங்கும் அறையாக மாற்றி கொடுத்திருந்தது 80களில் தமிழ் சினிமாவின் கனவுகளோடு சென்னைக்கு குடியேறும் பலருக்கும் அது தான் தாஜ்மஹால் ஆக தெரிந்த இடம்..
பலமுறை உதவி இயக்குனர்களுடன் கூடவே இரவில் படுத்து உறங்கி காலையில் சூட்டிங் சென்று இருக்கிறார் விஜயகாந்த்...
படப்பிடிப்பு தளத்தில் அனைத்து தரப்பிற்கும் ஒரே உணவு என்பது விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி அசத்தி காட்டிய சமபந்தி சமத்துவம்..
அதுநாள் வரை நடிகர்களுக்கு ஒரு உணவு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு உணவு, சாதாரண தொழிலாளர்களுக்கு ஒரு உணவு என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான சைவ அசைவம் கிடைக்கும் வகையில் விஜயகாந்த் செய்த சமபந்தி என்பது அன்றைய காலத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்க செய்தது விஜயகாந்தின் நல்ல மனது...
இந்த மனதை தான் கொண்டாடி தீர்க்கிறது தமிழ் சினிமா..
தமிழ் திரை உலகில் திரைப்பட கலைஞர்கள் பேசும் போது நடிகர் விஜயகாந்த் பேச்சு எப்போது வந்தாலும் விஜயகாந்தை சிலாகித்து சில நிமிடங்கள் பேசி விட்டே கடக்கிறார்கள்...
இப்படி பல சாதனைகளை சொல்லி கொண்டே போனாலும் விஜயகாந்தின் மிகப்பெரிய சாதனையாக அனைவரும் தவறாமல் குறிப்பிடுவது நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்ட கதை..
ஒரு பாகுபலி கதை போல விஜயகாந்தின் இந்த கதையை சொல்ல பல காரணங்கள் இருக்கிறது. நடிகர் சிவாஜி கணேசனால் தொடங்கப்பட்டு சம்பிரதாயத்திற்கு நடத்தப்பட்டு வந்த நடிகர் சங்கம் கடனில் மூழ்கி இடம் திவால் ஆகும் பொழுது ஹபிபுல்லா ரோட்டில் இருக்கும் இவ்வளவு பெரிய இடம் கடனில் முழுகுவதா என களத்தில் இறங்கி சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்து நடிகர் சங்கத்திற்கு ஓரு பெரும் நிதியை வங்கியில் வைப்பு தொகையாக செய்தது விஜயகாந்தால் மட்டுமே அந்த காலகட்டத்தில் செய்ய முடிந்த சாதனை..
இப்படியே இன்னும் மேலும் பல விஷயங்களை தகவல்களை சொல்லி கொண்டே போகலாம்...
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment