பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ் நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்காணோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த நான்கு நாள்களில் மாத்திரம் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 32 பேரும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 70 பேருமாக 102 பேரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரையிலான ஒரு வார காலம் நாடு முழுவதும் விசேட வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்யவும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பாகவும் இவ் விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
Post a Comment