வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புப் பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மிக்ஜாம் புயல், திங்கட்கிழமை (04) தமிழக வடகடலோர மாவட்டங்களை நெருங்கிச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை (05) புயல் மேலும் தீவிரமடைந்து தெற்கு ஆந்திராவின் நெல்லூர் - மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கிறது.
புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு காற்று மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (04) காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மழை பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகமிக அவசியமான சூழல் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொது
மக்கள் சிலர் ஊடகப் பேட்டிகளில் 2015 மழை வெள்ளம் திரும்பிவிட்டதுபோல் உணர்வதாகத் தெரிவித்துள்ளனர். அமைச்சர் விளக்கம்: இதற்கிடையில் தமிழக வருவாய்த் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், "இடைவிடாமல் பெய்யும் கனமழையால் நகரில் பரவலாக மழைநீர் தேங்கியுள்ளதாகப் புகார்கள் வருகின்றன.
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளால் தான் இந்த அளவுக்காவது மக்கள் இயல்பாக வெளியே வரமுடிகிறது. மீதமுள்ள 10 முதல் 15 சதவீதப் பணிகளையும் விரைவில் முடிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதையும் செய்வோம்.
சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்கள் அவசியமின்றி வெளியேற வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்று மாலைக்கு மேல் மழை குறையும் என்பதால் நாளை விடுமுறை விடுவதற்கான அவசியம் இருக்காது என்றே கருதுகிறோம்" என்றார்.
விமான சேவைகள் முடக்கம்:
கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னைக்கு வர வேண்டிய 16 விமானங்கள் பிற பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டன.
அதிமுக அலுவலகத்தில் புகுந்த வெள்ளநீர்
11 ரயில்கள் ரத்து:
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வியாசர்பாடி - பேசின் பிரிட்ஜ் இடையேயான 14ஆம் எண் பாலத்தில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டிப் பாய்வதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்