2023 ஆம் ஆண்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்திருக்கும். ஆனா கடைசியா மிக்ஜாம் என்ற புயல் ஏற்பட்டு சென்னை மாநகரத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டது. ஆனால் மக்கள் மீண்டு வர வேண்டும் என திரை பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி அளித்தனர். அதிலும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய இந்த 6 நடிகர்கள் நிவாரண நிதியாக லட்சங்களில் முதல் கோடிகளில் வரை வள்ளல்களாக வாரி வழங்கினார்கள்.
விஜய் அரசியலுக்கு வருகிறார் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்போது அவருடைய ரசிகர் மன்றத்தின் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறார். அதேபோல் தான் விஷ்ணு விஷால் வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சம் கொடுத்து இருக்கிறார்.
முதலில் காமெடி நடிகராகவும் இப்போது ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் சூரி பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 லட்சம் கொடுத்துள்ளார். அதேபோல் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சேர்ந்து மொத்தமாக 10 லட்சத்தை தங்கள் சார்பாக கொடுத்திருக்கின்றனர். இவர்களுடன் ஹரிஷ் கல்யாணம் ஒரு லட்சம் கொடுத்துள்ளார்.
Tags:AKSTAMILMEDIA
indian news
Post a Comment