சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் பான் இந்தியா படமாக வருகிறது. அதாவது ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உருவாகும் படம் அந்த மொழியில் மட்டும் தான் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அதாவது சாதாரணமாக ஒரு படம் உருவானால் ஐந்து மொழிகளில் வெளியிடப்படுகிறது.
இப்போது ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ படங்களும் பான் இந்திய படமாக தான் வெளியானது. அதேபோல் பாலிவுட்டில் ஜவான் படமும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இப்போது அதேபோல் தான் மணிரத்தினம் மற்றும் கமல் கூட்டணியில் தங் லைஃப் படமும் ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.
இதுவரை மணிரத்தினத்தின் படங்களை எடுத்துக் கொண்டால் தமிழில் தான் டைட்டில் வைக்கப்படும். பொன்னியின் செல்வன் படத்திற்கும் அப்படி வைக்கப்பட்ட நிலையில் மற்ற மொழிகளில் PS1, PS2 என ஆங்கில மொழியில் பொன்னியின் செல்வன் படத்தை குறிப்பிட்டு இருந்தனர். அதேபோல் கமலும் இதுவரை தமிழ் பெயர் தான் டைட்டிலை வைத்து வந்தார்.
Tags:AKSTAMILMEDIA
cinema news
Post a Comment