ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பட மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற தொலைக்காட்சி உரையிலேயே இஸ்ரேல் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் மற்றும் பிற அதிகாரிகளுடன் டெல் அவிவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது போர்நிறுத்தத்திற்கு உடன்படுமாறு அன்டனி பிளின்கன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை அடுத்து சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு தொலைக்காட்சியில் பேசிய இஸ்ரேல் பிரதமர், பணயக் கைதிகளை விடுவிப்பதை உள்ளடக்காத ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை நிராகரிப்பதாக கூறியுள்ளார்.
ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் முழு பலத்துடன் தொடர்ந்தும் செயற்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 9,227 பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment