இவர் இன்று 69 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நேற்று சென்னை லீலா பேலஸில் அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில், சூர்யா, சிவராஜ்குமார், அமீர்கான், உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனை லியோ படக்குழுவினர் சமீபத்தில் சந்தித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை லியோ பட தயாரிப்பாளர் லலித்குமார் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, 'இது எப்போதும் எனக்கு ஸ்பெசலானது. விஜய் சாருக்கும், கமல் சாருக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
இதில், நடிகர் விஜய், ஜெகதீஸ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.
Post a Comment