செப்டெம்பர் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,500 நிலநடுக்கங்களை சூப்பர் எரிமலை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் சங்கத்தின் கூற்றுப்படி, ஒரு சூப்பர் எரிமலை என்பது எரிமலை வெடிப்பு குறியீட்டில் 8 அளவு வெடித்த எரிமலை மையம் என வரையறுக்கப்படுகிறது.
இந்நிலையில் சூப்பர் எரிமலையைச் சுற்றி நிலநடுக்கங்கள் தொடர்கின்ற நிலையில் மக்களை கூட்டமாக வெளியேற்ற இத்தாலி திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபிள்ஸுக்கு வெளியே உள்ள Pozzuoli நகரில் வசிப்பவர்கள், காம்பி ஃப்ளெக்ரேயின் எரிமலை பகுதியில் வசிப்பதால் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
80-சதுர மைல் தாழ்வான பகுதியில் ஒரு டசின் கூம்பு வடிவ எரிமலைகள், பல ஏரிகள் மற்றும் அரை மில்லியன் குடியிருப்பாளர்கள் உள்ளனர்.
மேலும் 80,000 மக்கள் இதன் சுற்றுவட்டாரத்தில் வசித்து வருகின்றனர்.
Post a Comment