சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது.
முன்னர் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் சில மாதங்கள் தள்ளி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். படத்தின் டிரைலர் ரிலீஸான பின்னர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் இப்போது முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அயலான் இயக்குனர் ரவிகுமார் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், அதன் பிறகு சூர்யாவுக்காக டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தையும் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tags- cinema news
Post a Comment