பெரம்பலூர் நாடாளுமன்றத்தை குறி வைக்கும் அருண் நேரு!
அருண் நேருவும் தன் சித்தப்பா ராமஜெயம் போல் அதிரடி அரசியல் பண்ணாமல், அமைதியான அரசியலை முன்னெடுத்து வருகிறார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகள் முழுவதுமே பம்பரமாக சுற்றி வருகிறார். அவருக்கு மத்திய மாவட்ட செயலாளரான வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளரான காடுவெட்டி தியாகராஜன், துறையூர் எம்.எல்.ஏ ஸ்டாலின் குமார், லால்குடி எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் ஆகியோரும் உதவிகரமாக இருக்கின்றனர். அதேபோல் அருண் நேரு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தன் வெற்றியை உறுதி செய்ய ஒரு ரகசிய டீமை இறக்கி விட்டு சர்வே எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சாதக, பாதகமான விசயங்களை அறிந்து வைத்திருக்கிறாராம் அருண் நேரு. அதேபோல் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் நிறைவேற்றாத வாக்குறுதிகளை எல்லாம் புள்ளி விபரமாக . எடுத்து வைத்துள்ளவர். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விஷேச மற்றும் துக்க காரியங்களில் கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறாராம்.
Post a Comment