புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம்... உச்சநீதிமன்றம் அதிரடி: ரிஷிக்கு பெரும் பின்னடைவு


புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம்

பிரித்தானியா, சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோதப் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.


பிரித்தானிய பிரதமர் ரிஷியும், முன்னாள் உள்துறைச் செயலரான சுவெல்லாவும், அதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டிவந்தார்கள்.


அவற்றில் ஒன்று, பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டா போன்ற ஒரு நாட்டுக்கு நாடுகடத்தி, அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்கும் வரை அவர்களை அந்நாட்டில் தங்கவைப்பதாகும்.


சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம் குறித்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் ஒன்று, ருவாண்டா நாடு பாதுகாப்பான நாடாக கருதப்படலாம் என்று கூறியிருந்தது.


அந்த தீர்ப்பை எதிர்த்து புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர், சில மனிதநேயக் குழுக்கள், மற்றும் எல்லை அலுவலர்கள் யூனியன் ஒன்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் சென்றனர்.



மேல்முறையீட்டு நீதிமன்றம், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறியதுடன். ருவாண்டா பாதுகாப்பான நாடாக கருதப்பட்ட முடியாது என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தது.


அந்த தீர்ப்பு அரசுக்கு பெரும் அடியாக கருதப்பட்ட நிலையில், தீர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறிய பிரித்தானிய பிரதமரான ரிஷி, இந்த நாட்டிற்குள் யார் வருவது என்பதை நாடும் அரசும்தான் தீர்மானிக்கவேண்டுமேயொழிய, குற்றவாளிக் கும்பல்கள் அல்ல என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வதாகவும் கூறியிருந்தார்.



இந்நிலையில், சற்றுமுன் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற தலைவரான Lord Reed, தனது தீர்ப்பில், வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகளும், ருவாண்டா திட்டம் சட்டவிரோதமானது என்னும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆமோதிப்பதாக தெரிவித்துள்ளார்.


அந்த முடிவுக்கு வர அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை நாங்கள் ஒருமனதாகக் கருதுகிறோம். உண்மையில், ஆதாரங்களை நாங்களும் அறிந்துகொண்டதால், அவர்களுடைய முடிவுக்கு நாங்கள் உடன்படுகிறோம் என்றும் கூறியுள்ளார் அவர்.


இந்த தீர்ப்பு பிரதமர் ரிஷிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு தாங்கள் எதிர்பார்த்ததுபோல அமையவில்லை என்று கூறியுள்ள ரிஷி, நாங்கள் ஏற்கனவே சில மாதங்களாக இது குறித்து பேசிவருகிறோம், எப்படியும் படகுகளை நிறுத்தியே தீருவோம் என்றும் கூறியுள்ளார்.



உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்


www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  

https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss  👈👈

AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial