இலங்கையின் காலிக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 
இந்த நிலநடுக்கம் இன்று (14) மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுனாமி எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை .
எனினும் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
 
        
        
  
        
 
Post a Comment