நடிகை நயன்தாரா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். அங்குள்ள ஒரு சின்ன தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி ஹீரோயின் என்ற இடத்தை தன்வசம் வைத்திருக்கிறார். தன்னுடைய ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.
சிறந்த நடிகையாக மட்டுமில்லாமல் இப்போது நயன்தாரா பிசினஸிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் உடனான திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து இந்தியாவின் பிரபலமான தேநீர் நிறுவனம் சாய் வாலாவில் முதலீடு செய்தார்கள். பின்னர் நயன்தாரா சொந்தமாகவும் பிசினஸ் செய்ய திட்டமிட்டார்.
இந்த வியாபாரத்தின் முதல் கட்டமாக நயன்தாரா பிரபலங்களுக்கு தன்னுடைய அழகு சாதன பொருட்களை பரிசாக அனுப்பி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறார். நயன், ஜவான் படத்திற்காகத்தான் இன்ஸ்டாகிராம் ஆரம்பித்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் தன்னுடைய பிசினஸ் வளர்ச்சிக்காக தான் இப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
சில வாரங்களுக்கும் முன்பு இயற்கை முறையில் உணவு தயாரிக்கும் டிவைன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் மீது தன்னுடைய முதலீடை செலுத்தினார். தற்போது விஜயதசமி தினத்தன்று நாப்கின் பிசினஸை தொடங்கி இருக்கும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த நாப்கின் எந்தவித கெமிக்கலும் இல்லாமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment