சூப்பர் ஸ்டார் இப்போது இளம் நடிகர்களே பொறாமை கொள்ளும் அளவுக்கு எனர்ஜியுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடைய ஜெயிலர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு இருந்த எனர்ஜி இன்னும் இரு மடங்காகியுள்ளது. அது தலைவர் 170 படப்பிடிப்பிலும் வெளிப்படையாக தெரிகிறதாம்.
அந்த அளவுக்கு துள்ளலுடன் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் அடுத்ததாக லோகேஷ் இயக்கும் 171 படத்திற்காகவும் தயாராக உள்ளார். இதற்கு இடையில் லால் சலாம் படமும் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது. இப்படி பரபரப்பாக இருக்கும் இவருக்காக சூர்யாவை ஒரு இயக்குனர் டீலில் விட்டு விட்டார் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.
ஆனால் இதை அந்த இயக்குனரே வெளிப்படையாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் பா ரஞ்சித் சூர்யாவுடன் ஒரு படத்தில் இணைய இருந்து பிறகு முடியாமல் போனதன் காரணத்தை ஓப்பன் ஆக கூறி இருக்கிறார். அதாவது கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற மிகப்பெரிய ஹிட் கொடுத்ததற்கு பிறகு ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க பல ஹீரோக்களும் ஆர்வம் காட்டி வந்தனர்.
அந்த சமயத்தில் தான் அவர் சூர்யாவுக்காக ஒரு கதையை கூறி ஓகே செய்து ஒப்பந்தமும் போட்டு இருக்கிறார். ஆனால் அப்போது திடீரென ரஜினியின் மகள் சௌந்தர்யாவிடமிருந்து அவருக்கு ஒரு போன் வந்திருக்கிறது. அதில் சூப்பர் ஸ்டார் ரஞ்சித்தை பார்க்க விரும்புவதாகவும் அடுத்ததாக ஒரு படத்தில் இணைய ஆசைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
எப்போதுமே ரஜினி ஒரு இயக்குனர் தரமான வெற்றியை பதிவு செய்துவிட்டால் கூப்பிட்டு பாராட்டுவது வழக்கம். அதேபோன்று அவர்களுடன் இணைந்து படம் பண்ணவும் ஆசைப்படுவார். அப்படித்தான் நெல்சன், லோகேஷ் ஆகியோருடனும் இப்போது இணைந்திருக்கிறார். அந்த வகையில் ரஜினி இப்படி கூறியதும் உடனே பா ரஞ்சித் அவருக்காக கதையை தயார் செய்திருக்கிறார்.
அப்படி உருவான படம் தான் கபாலி இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சூர்யா நடிக்க இருந்த இப்படம் ரஜினிக்காக சில பல மாறுதல்கள் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. இப்படியாக சூர்யாவுக்கு கிடைக்க இருந்த வாய்ப்பை சூப்பர் ஸ்டாரின் வாரிசு தேடி போய் பிடுங்கி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment