லியோ சர்ச்சைக்கு ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ்.

 



விஜய், லோகேஷ் கூட்டணியின் லியோ ரிலீஸ் ஆவதற்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கிறது. ஆனாலும் படத்திற்கான சர்ச்சைகள் மட்டும் இன்னும் குறைவதாக இல்லை. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளிவந்து அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

ரத்த களரியாக இருந்த அந்த வீடியோவில் விஜய் பேசிய கெட்ட வார்த்தையும் இப்போது கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறது

இது பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது லோகேஷ் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது இதற்கு காரணம் நான் மட்டுமே என்று அவர் குறிப்பிட்டதோடு விஜய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் தெளிவு படுத்தியிருக்கிறார்.

அந்த வகையில் இந்த காட்சியை எடுக்கப் போவதற்கு முன் விஜய் லோகேஷிடம் இப்படி ஒரு வார்த்தை இருக்கிறது, நான் பேசலாமா என்று கேட்டிருக்கிறார். உடனே அவர் இது கதைக்கு ரொம்பவும் தேவையான ஒன்று தான் தைரியமாக பேசுங்கண்ணா என்று சொன்னாராம்.

இருந்தாலும் விஜய் பலமுறை தயங்கிய நிலையில் லோகேஷ் கட்டாயப்படுத்தி தான் அந்த காட்சியில் நடிக்க வைத்திருக்கிறார். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது எந்த வம்பு தும்புக்கும் செல்லாத ஒரு கேரக்டர் அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக வந்த கோபத்தின் வெளிப்பாடுதான் அந்த வார்த்தை.

அது அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான ஒன்றுதான். இதனால் யாருக்காவது சங்கடம் ஏற்பட்டு இருந்தாலோ விஜய் அண்ணா வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்து விட்டதே என்று வருத்தப்பட்டு இருந்தாலோ அந்த பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன். இதற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை முழுக்க முழுக்க என்னுடைய முடிவு தான் என லோகேஷ் ட்ரெய்லர் சர்ச்சையை முடித்து வைத்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial